கனடாத் தமிழீழச் சங்கம் - பல்கலாச்சார குடிவரவாளர் சேவைகள்
The Tamil Eelam Society of Canada / TESOC Multicultural Settlement Services
La Société de l'Eelam Tamoul du Canada / TESOC Services d’établissement multiculturel

எமது சேவைகள்

இளையோர் குடியமர்வு மற்றும் இசைவாக்கல் திட்டம்

கனடாத் தமிழீழச் சங்கப் பல்பண்பாட்டுக் குடியமர்வுச் சேவையானது தெளிவான சேவை நாடிகளைக் கொண்டது. அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பெற்றோர் மற்றும் நிரந்தர வதிவுரிமை பெற்ற புதிய குடிவரவாளர் இச்சேவைகளைக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். வாழ்க்கைத் துணை, பெற்றார், பெற்றாரின் பெற்றார், உடன்பிறப்புகள் முதலியோரது குடும்பப் பொறுப்பேற்றல் சார்ந்த சேவைகளைக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். இச்சேவைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, அரபு, அயபயானி, பாரசீகம், பாஸ்டோ, உருசியன், தமிழ், துருக்கி, உருது ஆகிய மொழிகளில் வழங்கப்படுகின்றன. முற்கூறிய மொழிகளிலுள்ள மூல ஆவணங்களுக்கு ஆங்கில மொழி பெயர்ப்பும் வழங்கப்படும். தேவைப்படுமிடத்து உறுதியுரை ஆவணங்கள் மற்றும் சட்ட ஆவணங்கள் ஆக்கி அளிக்கப்படும். கனடாக் குடியுரிமை மற்றும் குடிவரவுத்துறையிடமிருந்து வரும் தொடர்பாடல்களை எமது சேவை நாடிகள் புரிந்து கொள்ள உதவி வருகின்றோம். மேலும், குடியுரிமை, கடவுட்சீட்டு, பயண ஆவணம், வேலை ஒப்பம், நல்வாழ்வு அட்டை, வீட்டு வசதி முதலியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை நிரப்ப உதவி வருகிறோம்.
கனடாக் குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறையாலும் குடிவரவாளருக்கு உதவும் ஒன்ராறியோ அமைப்புகளின் அவையாலும் நடத்தப்பட்ட வினைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகளில் எமது ஆறு குடியமர்வு அலுவலர்களில் பெரும்பான்மையோர் கலந்து கொண்டனர். இதன்மூலம் எமது அலுவலர்களது திறன்கள் பெருகியதோடு இற்றைப்படுத்தல் என்னும் கொள்கைக்கமைய அவர்கள் மேலும் சிறப்பாகச் செயற்படவும் வாய்ப்புக் கிடைத்து. நாங்கள் ஒழுங்காகக் குடியமர்வு அலுவலர் கூட்டங்களை நடத்துகிறோம். இதன்மூலம் ஊழியர்களிடையே தகவல்களைப் பரிமாறவும் ஆதரவளிக்கவும் முடிவதோடு சேவை நாடிகளுக்குத் தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்கவும் முடிகிறது. எமது சேவைத் திறன் மற்றும் உதவிகள் பற்றிப் பல சேவை நாடிகளிடமிருந்து பாராட்டுக் கடிதங்கள் மற்றும் செய்திகளை எமது குடியமர்வு அலுவலர்களில் பலர் பெற்றுள்ளனர். குடியமர்வு மற்றும் ஒன்றிணைத்தல் நடைமுறை சந்திக்கும் அறை கூவல்களைச் சந்திக்கவும் கூடுதலான ஆதரவை வழங்கவும் எமது அலுவலர்கள் அணியமாக உள்ளனர்.

Le TESOC a été financé par :

நிழற் படங்கள்
>