கனடாத் தமிழீழச் சங்கம் - பல்கலாச்சார குடிவரவாளர் சேவைகள்
The Tamil Eelam Society of Canada / TESOC Multicultural Settlement Services
La Société de l'Eelam Tamoul du Canada / TESOC Services d’établissement multiculturel

எமது சேவைகள்

பெண்களுக்கு உதவும் பெண்கள்
‘பெண்களுக்கு உதவும் பெண்கள்’ என்று அழைக்கப்படும் இந்நிகழ்ச்சித் திட்டமானது குமுகத்தில் உள்ள தமிழ்ப் பெண்களுக்கு உதவும் நோக்கோடு வரையப்பெற்றதாகும். இதற்கான நிதி ரொரன்ரோ மாநகர சபையால் வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சித் திட்ட வாயிலாகப் பெண்களது வினைத்திறன்களை மேம்படுத்தல், பெண்களைப் பாதிக்கும் விடயங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல், அன்றாட வாழ்க்கைக்கு உதவக் கூடிய வளங்கள் மற்றும் வாய்ப்புகளை இனங்காணல், பிற பெண்களுக்கு உதவுதல், பெண்களிடையே பிணைப்பை ஏற்படுத்தல் முதலிய விடயங்களில் பெண்களுக்கு அறிவூட்டப்படுகின்றது.
இந்நிகழ்ச்சித் திட்டமானது பெண்களுக்கு வலுவூட்டி, அவர்களது தனிப்பட்ட நலன்களை மேம்படுத்தி, வளங்களைப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெருக்கி, அவர்களது குமுக வலைப்பின்னலை வளர்த்தெடுக்க உதவுகிறது.

தகுதியானவர் யார்?
தமிழ்ப் பெண்கள் மட்டும்

வழங்கும் சேவைகள்
• தகவல் அல்லது தொடர்புடைய வினைத்திறன் வழங்கல்
• பயிற்சிப் பட்டறைகள்
• தனித் தனி அறிவுரை வழங்கல்
• பிணைப்பு அமர்வுகள்

Le TESOC a été financé par :

நிழற் படங்கள்
>