கனடாத் தமிழீழச் சங்கம் - பல்கலாச்சார குடிவரவாளர் சேவைகள்
The Tamil Eelam Society of Canada / TESOC Multicultural Settlement Services
La Société de l'Eelam Tamoul du Canada / TESOC Services d’établissement multiculturel

எமது சேவைகள்

குடியமர்வு மற்றும் இசைவாக்கற் திட்டம்:
கனடாவுக்கு வரும் புதிய குடிவரவாளர் இம்மண்ணில் குடியமர்வதற்கும் கனடாச் சூழலுக்கு இசைவாக்கம் அடைவதற்கும் பெரும் போக்குக்குமுகத்தோடு ஒன்றிணைவதற்குமான சேவைகளை வழங்குதலும் அத்தகைய சேவைகளைப் பெற ஆற்றுப்படுத்தலுமே இத்திட்ட இலக்காகும்.
புதிய குடிவரவாளர் குடியமர்வதற்கும் இசைவாக்கம் அடைவதற்கும் ஒன்றிணைவதற்கும் ஆற்ற வேண்டிய செயற்பாடுகள், நடைமுறைகள் பற்றி அவர்களுக்கு அறிவூட்டும் பொருட்டான கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் தகவல் அளிப்புகளையும் குழு நிலையிலும் தனிநிலையிலும் நடத்துதல்.
குடியமர்வு, இசைவாக்கம் மற்றும் ஒன்றிணைதற் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத் தேவைகளையும் சேவைகளையும் வழங்குவதோடு மட்டுமன்றி அவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்களையும் அமைப்புகளையும் இனங்கண்டு பரிந்துரைத்தும் ஆற்றுப்படுத்தியும் வருதல். இத்திட்டத்துக்கான நிதி கனடாக் குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறையால் அளிக்கப்படுகின்றது.

தகதியானவர் யார்?
• கனடாவில் நிரந்தர வதிவுரிமையர் மற்றும் ஏதிலி நிலை பெற்றோர்.
கனடாக் குடியுரிமையர் (Citizens), வருகைதருவோர் (tourist)மற்றும் ஏதிலிக்கோரிக்கையர் (refugees)தகுதியற்றோர் ஆவர்.

குடியமர்வுச் சேவைகள்:
• குடிவரவு அலுவல்கள்
• குடும்பப் பொறுப்பேற்றல் விண்ணப்பம் நிரப்பல்
• நிரந்தரவதிவுரிமை விண்ணப்பம் நிரப்பல்
• நிரந்தர வதிவுரிமை அட்டை விண்ணப்பம் நிரப்பல்
• குடியுரிமை விண்ணப்பம் நிரப்பல்
• வேலை ஒப்புதல் விண்ணப்பம் நிரப்பல்
• குமுகநல உதவிக்கு விண்ணப்பித்தல்
• ஓன்ராறியோ இயலாதோர் உதவிக்கு விண்ணப்பித்தல்
• குடியமர்வு அறிவுரை வழங்கல்
• காத்துக்கோடல் மற்றும் பரிந்துரை வழங்கல்

பிற சேவைகள்:
• தொண்டர் பணிக்கு அமர்த்துதல்
• மொழி பெயர்ப்பு
• உறுதியுரை ஆவணம் ஆக்கல்
• சான்றிதழ்களை உறுதிப்படுத்துதல்

Le TESOC a été financé par :

நிழற் படங்கள்
>