கனடாத் தமிழீழச் சங்கம் - பல்கலாச்சார குடிவரவாளர் சேவைகள்
The Tamil Eelam Society of Canada / TESOC Multicultural Settlement Services
La Société de l'Eelam Tamoul du Canada / TESOC Services d’établissement multiculturel

எமது சேவைகள்

புதிய குடிவரவாளருக்கான ஆங்கில வகுப்புகள்

கனடாவுக்கு வரும் புதிய குடிவரவாளர் அன்றாட அலுவல்களை மேற்கொள்ளவும் கல்வியைத் தொடரவும் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளவும் கனடாக் குமுகத்தோடு ஒன்றிணையவும் முதன்மையான தடையாக இருப்பது ஆங்கில மொழியில் போதிய அறிவு இன்மையாகும். இத்தடையை நீக்குவதே புதிய குடிவரவாளருக்கான ஆங்கிலம் கற்பிக்கும் திட்டத்தின் இலக்காகும்.

இந்த ஆங்கில வகுப்புகள் அவரவர் தேவைக்கேற்ற வகையிலும் அவரவர்தம் மொழி அறிவுக்கு ஏற்ற நிலையிலும் மொழி மற்றும் தொடர்பாடற் திறன்களை மேம்படுத்தும் முறையிலும் ஒன்று முதல் ஏழு வரையிலான நிலைகளில் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்துக்கான நிதி கனடாக் குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறையால் அளிக்கப்படுகின்றது.

வை.எம்.சீ.ஏ நிறுவனத்தின் மதிப்பீட்டாளரால் மேற்கொள்ளப்படும் மொழித் திறனறி மதிப்பீடொன்றின் வாயிலாக அவரவர் கற்க வேண்டிய நிலைகள் முடிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நிலையும் மூன்று திங்களைக் கொண்டதாகும். இந்த ஆங்கில வகுப்புகள் இசுக்காபரோ, லான்சுடவுண் ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன.

தகுதியானவர் யார்?
கனடாவில் நிரந்தர வதிவுரிமையர் மற்றும் ஏதிலி நிலைபெற்றோர்.

•கனடாக் குடியுரிமையர், வருகை தருவோர் மற்றும் ஏதிலிக் கோரிக்கையர் தகுதி அற்றோர் ஆவர்.

வகுப்பின் சிறப்புக் கூறுகள்:
•மாணவர்மையக் கல்வி முறையிலான கற்பித்தல்
•மொழி அறிவுக்கு ஏற்ற நிலையிலான கற்பித்தல்
•துறைகள் சார் மொழிக் கல்வி மேம்பாடு
•கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதற் திறன் மேம்பாடு
•தொடர்பாடல் திறனை வளர்ப்பதற்கான ஒழுங்குகள்
•கணினி வழியிலான கல்வி
•இறுவட்டுக்கள் வழியான மொழித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்
•வெளிநாட்டு ஆங்கிலத்தரத் தேர்வுக்கு அணியமாக்கல்

பிற வசதிகள்:
•சிறந்த குழந்தை காப்பக வசதிகள்
•மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் செலவு அளிப்புகள்
•வெளிக்களச் செலவுகள் வாயிலான மொழிப் பயிற்சிகள்
•வருகைதரு பேச்சாளரது சொற்பொழிவுகள்
•கனடா மரபு விழாக்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு
•கனடா வரலாறு, குமுகம், அரசியல், புவியியல் பற்றி அறிவு பெறல்

 

Le TESOC a été financé par :

நிழற் படங்கள்
கனடா நாள் - 2010
நத்தார் கொண்டாட்டம்
குழந்தை பராமரிப்பு
மற்றையவை
>