கனடாத் தமிழீழச் சங்கம் - பல்கலாச்சார குடிவரவாளர் சேவைகள்
The Tamil Eelam Society of Canada / TESOC Multicultural Settlement Services
La Société de l'Eelam Tamoul du Canada / TESOC Services d’établissement multiculturel

எமது சேவைகள்

வேலை தேடற் பயிற்சிப் பட்டறைத் திட்டம்

குறிக்கோள்:
கனடாவுக்கு வரும் குடிவரவாளர் கனடாத் தொழிற் சந்தையில் வேலை தேட முனையும் பொழுது தொடர்ச்சியான தடைகளையும் இடையூறுகளையும் சந்திக்கின்றனர். மேற்படி தடைகளையும் இடையூறுகளையும் அகற்றிக் குடிவரவாளருக்கு வேலை பெற்றுக் கொடுப்பதே இவ்வேலை தேடற் பயிற்சிப் பட்டறைத் திட்டத்தின் இறுதி இலக்காகும். இந்த இலக்கோடு வேலை தேடும் பயிற்சிப் பட்டறைத் திட்டமானது 1998 ஆம் ஆண்டு முதல் கனடாத் தமிழீழச் சங்கத்தில் செயற்பட்டு வருகின்றது. புதிய குடிவரவாளர், தொழிற் சந்தையுள் நுழைவதற்கு முன்பு அதுபற்றிய அறிவூட்டல், அணியமாக்கல், அறிவுரை வழங்கல், ஆதரவளித்தல் ஆகியவற்றை இவ்வேலை தேடற் திட்டம் வழங்கி வருகின்றது. இத்திட்டத்துக்கான நிதி கனடாக் குடியுரிமை மற்றும் குடிவரவுத் துறையால் அளிக்கப்படுகின்றது.

பட்டறைச் செயற்பாடுகள்:
வேலைதேடும் பயிற்சிப் பட்டறைத் திட்டக் குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டாகக் குடிவரவாளருக்கு மூன்று நாள் தொடர்ச்சியான பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகின்றது. இப்பட்டறையில் கனடாத் தொழிற் சந்தை, கனடாவில் வேலை தேடுவதற்கான தொழிற் திறன்கன் மற்றும் மென் திறன்கள், தன்மதிப்பீடு, தன்விவரக் குறிப்பாக்கம், வேலை தேடும் வழிமுறைகள், வேலை தேடுவதிலுள்ள தடைகளும் அவற்றைத் தாண்டலும், வலைப்பின்னல் உருவாக்கம், விண்ணப்பம் நிரப்பல், நேர்காணல் நடைமுறைகள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், தற் சந்தைப்படுத்தலுக்கான குறிப்புகள், மறைவான தொழிற்சந்தையில் வேலை தேடல், உழைப்போர் உரிமைகள், பெற்ற வேலைகளைப் பேணுதல் முதலியன பற்றி அறிவூட்டப்படுகிறது,

பிற செயற்பாடுகள்:
வேலை தேட அணியமாக்குவதற்கும் மேலாகப் பயிற்சிப்பட்டறையில் பங்கு கொள்வோர் அனைவருக்கும் தன்விவரக் குறிப்புச் செய்து கொடுப்பதோடு வருங்காலத்தில் தன்விவரக்குறிப்புச் செய்வதற்கான வழிகாட்டலும் வழங்கப்படுகிறது.. அத்தோடு வேலை தேடுதல் சார்ந்த அறிவுரை அளித்தல், வேலை வழங்கக் கூடிய தொழில் வழங்குநரை அடையாளங் கண்டு நேர்காணலுக்கு ஒழுங்கு செய்தல், வேலை பெற்றுக் கொடுத்தல், சேவை நாடிகள் வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் வரை அவர்களோடு தொடர்பைப் பேணுதல், வேலை பெறத் திறனில்லாதோரை வினைத்திறன் மேம்பாட்டின் பொருட்டாக உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல் ஆகியவற்றையும் செய்து வருகின்றோம்.

Le TESOC a été financé par :

நிழற் படங்கள்
>